அக்கரைப்பற்று மாநகர சபை குழுவினரின் தொடரும் களப்பணி
தேசிய காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ. எல். எம். அதாவுல்லா அவர்களின் தலைமையில், கம்பளையில் சில பிரதேசங்களில் அனர்த்தத்தால் குடிநீர் வசதியின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனத்தின் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இத்துடன் அப்பிரதேச மக்களின் வீடுகள், வெள்ளநீர் சென்ற பகுதிகளை பார்வையிட்டு சுற்றுச்சூழலை சுத்தமாக்கும் துப்புரவு பணிகளும், மாநகர சபை தீயணைப்பு படையினர் மற்றும் கௌரவ உறுப்பினர்களின் ஒத்துழைப்பில் தொடர்ந்து நடை பெற்றுவருகின்றன. மக்கள் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்யும் முயற்சியாக அக்கரைப்பற்று மாநகர சபை குழுவினர் செயற்பட்டு வருகின்றனர்.




No comments