ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி - 2023
மட்டக்களப்பு ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் பாடசாலை அதிபர் DM. உவைஸ் அஹமட்
அவர்களின் தலைமையில் இன்று ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கௌரவ செயலாளர்
H.E.M.W.G. திசாநாயக்க அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
கெளரவ அதிதிகளாக பாடசாலையின் பழைய மாணவரும் கிழக்கு மாகாண விளையாட்டுத் துறைப் பணிப்பாளருமான N.M. நௌபீஸ் அவர்களும்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் SMM. அமீர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
இவர்களோடு சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான J.F. RIFKA மற்றும் MHM. ரமீஸ் அவர்களும் பங்குகொண்டனர்
மேலும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர்களான MIM. முதர்ரிஸ், MHM. நசீர் மற்றும் ஆசிரிய ஆலோசகர் MHM. மாஜித் அவர்களும் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்ததோடு பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்துகொண்டனர்
கடுமையான சீரற்ற காலநிலையிலும் விளையாட்டு நிகழ்வுகள் வெகுசிறப்பாக நடந்தேறின. இந் நிகழ்வில் மாணவர்களின் உடற்பயிற்சிக் கண்காட்சி மற்றும் அணி நடைக் கண்காட்சி நிகழ்வுகள் பார்வையாளர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தமை சிறப்பம்சமாகும். சீரற்ற காலநிலையிலும் பெருந்திரளான மக்கள் இவ்விளையாட்டுப் போட்டியை நிகழ்வை கண்டுகளித்தனர்.
No comments