சிறுவர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸாரினால் அன்பளிப்பு!
தில்சாத் பர்வீஸ்
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தினால் சமூக பொறுப்புணர்வின் அடிப்படையில் சிறார்களுக்கு கற்றல் மற்றும் உணவுப் பொருட்கள் என்பன இன்று (29) திங்கட்கிழமை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
வீரமுனை சீர்பாத தேவி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் கல்வி கற்கும் 13 மாணவர்களுக்கு தேவையான பொருட்களை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவினால் வீரமுனை சீர்பாத தேவி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாக உத்தியோகத்தர் கே.கஜேந்தினி இடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments