*பலாஹிகளான கலாநிதிகளுக்கு கௌரவம்*
காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரியில் பலாஹிப் பட்டம் பெற்ற வாழைச்சேனையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் H.L.M.முஹிதீன் (பலாஹி) Phd. அல்ஹாபில் அஷ்ஷெய்க் M.F.M.சிபான் (பலாஹி,அஸ்ஹரி Phd) ஆகியோர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு ஒன்று 24/09/2025 புதன்கிழமை மஃரிபுத் தொழுகையைத் தொடர்ந்து ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் புதிய காத்தான்குடி வளாகத்தில் அமைந்துள்ள மர்ஹூம் ஷைகுல் பலாஹ் பள்ளிவாயலில் ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான மஜ்லிஸூல் பலாஹிய்யீனின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மெளலவி A.அப்துல் அஸீஸ் (பலாஹி) BA அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் நிருவாகம் மற்றும் உஸ்தாதுமார்கள், மாணவர்கள் அதன் பழைய மாணவர் அமைப்பான மஜ்லிஸுல் பலாஹிய்யீனின் நிர்வாகிகள் அதன் பொதுச்சபை உறுப்பினர்களான பலாஹிகள் கௌரவம் பெற்ற பலாஹிகளான கலாநிதிகளின் குடும்ப உறவினர்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கௌரவம் பெற்ற பலாஹிகளான அஷ்ஷெய்க் கலாநிதி H.L.M.முஹைதீன் ( பலாஹி) அவர்கள் தனது கலாநிதிக் கற்கையை அரபு மொழித் துறையில் இந்தியா தமிழ்நாடு பாரதிதாசன் போன்ற பல்கலைக் கழகத்தில் 2024 இல் பூர்த்தி செய்திருந்தார்.
அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் கலாநிதி MFM சிபான் (பலாஹி,அஸ்ஹரி Phd) அவர்கள் எகிப்து அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் ஹதீஸ் துறையில் தனது கலாநிதி கற்கையை 2024 ஆம் ஆண்டு பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments