காத்தான்குடியில் இடம்பெற்ற மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்.
(எம்.பஹத் ஜுனைட்)
காத்தான்குடி இளைஞர் சமூக வலுவூட்டலுக்கும் சமூக அபிவிருத்திக்குமான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை (25) ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஒன்றியத்தின் தலைவர் எம்.ரீ.எம்.இர்பான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிட்டி ஒப்டிகல் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.எம். சமீல் கலந்துகொண்டார்.
இதன் போது சுமார் காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களை சேர்ந்த ஆறு பாடசாலைகளில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பார்வை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இலவச பரிசோதனை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments