Header Ads

Header ADS

காத்தான்குடி நவ இலக்கிய மன்றம் வழங்கும் இலக்கியச் சரம் 25 கடந்த 29/08/2025 அன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.


காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு நவ இலக்கிய மன்றத்தின் தலைவர் முத்தமிழ் மாமணி பாவலர் சாந்தி முஹைதீன் JP அவர்கள் தலைமை தாங்கினார்.

காத்தான்குடி இஸ்லாமிய முன்மாதிரி பாடசாலை பெண்கள் பிரிவு மாணவி செல்வி MJT. அக்தர் அவர்களின் அழகிய கிறாஆத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் தலைமை உரையையும் வரவேற்பு உரையையும் நவ இலக்கிய மன்றத்தின் தலைவர் முத்தமிழ் மாமணி பாவலர் சாந்தி முஹைதீன் JP அவர்கள் வழங்கினார்.
அவர் தமதுரையில் "இந்த வருடத்துடன் காத்தான்குடி நவ இலக்கிய மன்றம் 65 வருட நிறைவை எட்டுகிறது. அது கடந்த காலங்களில் ஆற்றிய இலக்கியப் பணி அளப்பரியது. அதே போல் இந்த நவ இலக்கிய மன்றத்தில் தமது இலக்கிய ஆற்றல்களை வளர்த்துக் கொண்ட பலர் இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல பகுதிகளிலும் இலக்கிய பணி ஆற்றி வந்தனர் வருகின்றனர். இதன்மூலமாக எமது நவ இலக்கிய மன்றம் பெருமை கொள்கின்றது." என்று தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து MC. ஹப்ளத் ஹலீமா குழுவினர் பாடல், செல்வி A. பாத்திமா ஐனி அவர்களின் பேச்சு, செல்வி SA. ஷாலினா மனால் அவர்களின் நாட்டார் பாடல், இஸ்லாமிய முன்மாதிரி பாடசாலை மாணவிகளின் கஸீதா போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
அத்துடன் கவிஞர் AL. பகுருதீன் அவர்கள் "வருவாயா மகளே" என்ற தலைப்பில் அழகிய கவிதை ஒன்றை இயம்பினார்.
இலக்கியச் சரத்தின் கலை நிகழ்வின் இறுதி அம்சமாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த "தீர விசாரித்தலே நன்மை தரும்" எனும் மேடை நாடகம் இடம்பெற்றது.
நடிகர்களான MH. அப்துல் நஸீர், MS. ரமலி, AGM. பழீல், MSM. மஜீத் (மதியன்பன்), A. அப்துல்லாஹ், HM. அப்துல் வாஹித் (வஹாப் நாநா), அல்ஹாஜ் HMAM. இஸ்மாயீல் MA, SLEAS (ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர்) பங்கெடுத்திருந்தனர்.
"பொதுவாக திருமண நடைமுறைகளின் போது முறையாக தீர விசாரணை செய்யாது நடைபெறும் திருமணங்கள் வாழ்க்கையில் எந்தளவு பாரிய பிரச்சினைகளையும் மாறுதல்களையும் சமூகத்தில் தோற்றுவிக்கின்றன" என்ற கருவில் இடம்பெற்ற இந்நாடகத்தின் கதையை நவ இலக்கிய மன்றத்தின் உறுப்பினர் MS. ரமலி எழுதி இருந்துடன், வசனம், இயக்கம், நெறியாழ்கை போன்றவற்றை நாடகக் கலைஞரும் ஊடகவியலாளரும் கவிஞருமான AGM. பழீல் செய்திருந்தார்.
இறுதி அம்சமாக இடம்பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் செயலாளர் வித்யாகீர்த்தி MM. அமீரலி BA ஆசிரியர் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றது.
நிகழ்வினை ஊடகவியலாளரும் கவிஞருமான MI. அப்துல் நாஸர் BA(Hons) அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்விற்கு ஊடக அனுசரணையை அவதானி ஊடக வலையமைப்பு வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
-ஊடகவியலாளர் AGM. பழீல்-

No comments

Powered by Blogger.