சம்மாந்துறை செந்நெல் கிராமத்திற்குள் அத்துமீறிய யானைகள் - பெரும் சேதம்!!
தில்சாத் பர்வீஸ்
நான்கு காட்டு யானைகள் அத்துமீறி நுழைந்து நேற்று (24) நள்ளிரவு 1.30 மணியளவில் செந்நெல் கிராமம் 01 பகுதியில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியதாக சம்மாந்துறை செந்நெல் கிராமம் மக்கள் தெரிவித்துள்ளனர்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் செந்நெல் கிராமம் 02 பகுதியில் காட்டு யானைகள் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், பயிர் நிலங்கள், வளவு, வாழைத்தோட்டங்கள் மட்டுமன்றி, சில தென்னை மரங்களையும் சேதப்படுத்தியதாக குறிப்பிட்டனர்.
குறித்த செந்நெல் கிராமம் பகுதியில் தெருவிளக்குகள் போதாமையால், ஊர்மக்கள் யானைகளை விரட்டுவதில் அதிக சிரமங்களை எதிர்கொண்டதுடன் அதிகாலை 5 மணி வரை மக்களை அச்சுறுத்தும் வகையில் யானைகளின் நடமாட்டம் காணப்பட்டுள்ளன.
இப்பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments