Header Ads

Header ADS

அநுர ஆட்சியும் மூன்று மாதமும்

 

அநுர குமார ஜனாதிபதியாக பதிவியேற்று இன்றுடன் (23) ஒரு வருடம் நிறைவு பெறுகிறது

இலங்கையை பெருளாதார சரிவிலிருந்து காப்பாற்றிவர் என்று எல்லோரும் கூறும் முன்னாள் ஐனாதிபதி ரணில் கூட சொன்னார்
அநுர அரசு மூன்று மாதம் கூட தாக்குப்பிடிக்காது என்றார்
பலரும் இந்த அரசை இல்லாமல் செய்வதற்கு பல பொய்களையும் கட்டுக்கதைகளையும் உருவாக்கி சதி செய்தார்கள் எல்லாமே புஷ்வானமானது
அரிசி இல்லை, உப்பு இல்லை நல்லமா? என்று பராளுமன்றத்தில் இந்த அரசை கேலி செய்தார்கள்
தற்போது நாட்டு மக்களுக்கு படிப்படியாக உண்மைகள் புரிய தொடங்கியுள்ளது
அநுர ஒரு தொழிலாளியின் மகன் ஆடம்பமர வாழ்க்கையை வெறுப்பவர்
தனது குடும்பத்தை அரசியலுக்குள் கலக்க விரும்பாதவர்
இப்படியான ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியாக வந்திருப்பது மக்களுக்கு வரம் என்றே சொல்ல வேண்டும்
முன்னாள் ஐனாதிபதி மகிந்தவின் ஆட்சியில் குடும்ப ஆட்சி தலைவிரித்தாடியதால் நாட்டுக்கு பேரிளப்பு ஏற்பட்டது யாவரும் அறிந்ததே
அநுர அரசின் ஒரு வருடத்தில் நல்ல பல மாற்றங்கள் தெரிய ஆரம்பித்துள்ளது
அரசியல் தலையீடற்ற ஆட்சி குறிப்பாக நீதித்துறை
ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை
போதைப் பொருளுக்கு எதிரான செயல்பாடு
இனவாதமற்ற ஆட்சி என சொல்லிக் கொண்டே போகலாம்
இதே பாதையில் தொடர்ந்து பயணித்தால் நல்ல பல மாற்றங்களை இலங்கை பெற்று பொருளாதாரத்தில் உயர்வடையும் என்பதில் சந்தேகமில்லை

No comments

Powered by Blogger.