சமூக வலுவூட்டல் தேசிய வேலைத்திட்டம்
- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
உள சமூக , சமூக வலுவூட்டல் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் போதைப் பொருள் தடுப்பு வேலைத் திட்டம் எதிர்மறையான விதத்தில் முகம் கொடுக்கும் பொறிமுறை எனும் கருப்பொருளில் காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் இன்று (23) செவ்வாய்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
காத்தான்கு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ் சில்மியா தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் குடும்ப அபிவிருத்தி திட்டத்தின் மூலம் வலுவூட்ட இனம் காணப்பட்ட அஸ்வசும, சமுர்த்தி பயனாளிகள் கலந்து கொண்டனர்.
இக் கருத்தரங்கில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியச்சகர் எம்.எஸ்.எம். ஜாபிர் அவர்களும் உளநல வைத்திய அதிகாரி டாக்டர் சுசிகலா பரமகுருநாதன் அவர்களும் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
சமூக அபிவித்தி உதவியாளர் எம். அன்சாரின் நெறிப்படுத்தல் இடம் பெற்ற இந்நிகழ்வில் அதிகளவான பயனாளிகள் கலந்து கொண்டனர் .
No comments