Header Ads

Header ADS

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு நடாத்தப்பட்ட முழு நாள் ஊடக பயிற்சிப் பட்டறை!!

 


(எம்.பஹத் ஜுனைட்)
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்புடன் இலங்கைப் பத்திரிகைப் பேரவை நடாத்திய
ஊடகவியலாளர்களுக்கான முழு நாள் ஊடக பயிற்சிப் பட்டறை சனிக்கிழமை (27) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் பிரதிநிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷனி ஶ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்ற இப் பயிற்சிப் பட்டறையில் இலங்கை பத்திரிகைப் பேரவையின் தலைவர் பீ.ஆர்.விஜயபண்டார பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் உதவி ஆணையாளர் சுரேசான்ன இரங்க,மட்டக்களப்பு மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
“சிறந்த சமுகத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகவியலாளர்களின் பங்கு” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற பயிற்சி பட்டறையில் திருகோணமலை பல்கலைக்கழக தொடர்பாடல் மற்றும் வனிக ஆய்வு பீடத்தின் விரிவுரையாளர் ஜோயல் ஜெய்ருஸ் ரவிச்சந்திரன் மற்றும் தினகரன், வாரமஞ்ச பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான தேவதாசன் செந்தில்வேலவர் ஆகியோர் சிறப்பான முறையில் விரிவுரையாற்றியிருந்தனர்.
இப்பயிற்சிப் பட்டறையில் மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் ஊடகங்கள், சமூக ஊடக வலையமைப்புக்கள் போன்றவற்றின் ஊடகவியலாளர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள், மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் இடம்பெறும் அரச நிகழ்வுகளை அறிக்கையிடும் உத்தியோகத்தர்கள் என 70 இற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.