ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும்!
(அஸ்ரி இப்னு அமீர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் (AGM) மற்றும் 30ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று 27ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு இலக்கம் 310, டீ.ஆர். விஜேவர்த்தன மாவத்தை கொழும்பு-10இல் உள்ள இலங்கை தபாலக கேட்போர்கூடத்தில் நடைபெறுகின்றன.
மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் அல்ஹாஜ் என்.எம். அமீன் தலைமையில் நடைபெறுகின்றன இந்த மாநாட்டில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ எம்.பி. பிரதம அதிதியாகவும், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி கெளரவ அதிதியாகவும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை , காதர் மஸ்தான் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விசேட அதிதிகளாக தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், அரச ஹஜ் குழு தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்
செயலாளருமான அப்துல் சமத் அவர்களும் ரோயல் கிங்ஸ் குரூப் ஒப் கொம்பனியின் தலைவர் எஸ்.எஸ். சிராஜுதீன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் ஊடகவியலாளர்களுக்கு நிதி உதவி வழங்குதல், தமிழ்நாடு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தமிழில் எழுதிய 'நபிகளாரின் சமூக வாழ்வு' எனும் தலைப்பிலான நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியீடு ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஊடகத்துறையில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் 13 ஊடகவியலாளர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
புதிய ஆண்டுக்கான செயற்குழுவைத் தெரிவு செய்வதற்கான தேர்தலும் இன்றைய தினம் இடம்பெறுகிறது.
No comments