பாலமுனை ஜாமியா பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வு -2025
-அப்துல் கரீம் -
பாலமுனை ஜாமியா பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வு கடந்த 26/09/2025 வெள்ளிக்கிழமை பாலமுனை நெஷனல் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.
ஜாமியா பாலர் பாடசாலையின் தலைவர் ஏ.எஸ்.அன்ஸார் JP தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன் பள்ளி பணியக தவிசாளர் எம்.ஏ.அமீர்தீன் கலந்து கொண்டார்.
இங்கு மாணவர்களின் ஆற்றலை பிரதிபலிக்கும் பல் வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இதன் போது கலை நிகழ்வில் கலந்து கொண்ட பாலர்களுக்கும் அவர்களை வழி நடாத்திய ஆசிரியைகளுக்கும் அதிதிகளால் பரிசில்களும், விருதுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்
இந்நிகழ்வில் ஊர் பிரமுகர்கள், கல்விமான்கள்,பாலர்களின் பெற்றோர்கள்,பாலர் பாடசாலையின் நிருவாகிகள் மற்றும் வைத்தியர் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
No comments