பொலிஸ் உபதேசக் குழு உறுப்பினர்களுக்கு; அடையாள அட்டை வழங்கி வைப்பு.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களைக் கொண்டு இயங்கி வரும் “பொலிஸ் உபதேசக் குழு” உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று (27) காத்தான்குடி பொலிஸ் நிலைய ஆலோசனை மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ. ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், காத்தான்குடி பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு பொறுப்பதிகாரி, பொலிஸ் உப பரிசோதகர் ஏ.எம்.எம். ஜவாஹிரின் வழிகாட்டலில், பொலிஸ் உபதேசக் குழுவின் செயலாளர் பி.எம். பயாஸின் நெறிப்படுத்தலின் கீழ் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
பொலிஸ் உபதேசக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டதோடு, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ. ரத்நாயக்க, காத்தான்குடி பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழு பொறுப்பதிகாரி பொலிஸ் உப பரிசோதகர் ஏ.எம்.எம். ஜவாஹிர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள், ராணுவ ஓய்வு நிலை அதிகாரிகள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், உபதேசக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments