ஒலுவில் களியோடை ஆற்றின் அருகில் பிறந்த நிலையில் குழந்தை ஒன்று கண்டெடுப்பு
(இசட். இம்தாத் ஹுசைன்)
ஒலுவில் களியோடை ஆற்றின் அருகில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று இன்று அப் பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்ட நபர் ஒருவரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிறந்து ஒரு சில நாட்களே ஆன பெண் குழந்தை இனம் தெரியாத நபரினால் கைவிடப்பட்ட நிலையில் இன்று காலை 09.30 மணியளவில் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின்னர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது அக் குழந்தை ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments