மூத்த எழுத்தாளர் எம். ஏ. ரஹீமா தலைமையில் இடம்பெற்ற 110 ஆவது வலம்புரி கவிதா வட்ட கவியரங்கு
மூத்த எழுத்தாளர் எம். ஏ. ரஹீமா தலைமையில் இடம்பெற்ற 110 ஆவது வலம்புரி கவிதா வட்ட கவியரங்கு
கவிஞரும், எழுத்தாளருமான எம்.ஏ. ரஹீமா கவியரங்கிற்கு தலைமை தாங்கினார். வகவ சிரேஷ்ட ஸ்தாபக உறுப்பினர் சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர்கனி முன்னிலையில் இடம்பெற்ற நிகழ்வினை வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நெறிப்படுத்தினார்.
செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரையையும், பொருளாளர் ஈழகணேஷ் நன்றியுரையையும் வழங்கினர்.
எமது கடைசிக் கவியரங்கில் எம்முடன் கலந்து கொண்டவரும் அண்மையில் எம்மை விட்டுப் பிரிந்தவருமான எம்.பீ.எம். சித்தீக்குக்காக மௌனப் பிரார்த்தனை இடம்பெற்றது.
எம். ஏ. ரஹீமாவின் தலைமையில் நடைபெற்ற 110 ஆவது கவியரங்கில் கவிஞர்கள் தெஹியோவிற்ற ஆர். சிவராஜா, கிண்ணியா அமீர் அலி, வத்தளை மு. சிவசண்முகம், கலேவெல நபீல் இப்னு இஸ்மாயீல், க. இந்திராதேவி, சிந்தனைப்ரியன் முஸம்மில், எம்.யூ. கமர்ஜான் பீபி, பிறைக்கவி முஸம்மில், ஸ்ரீதேவி கணேசன், என்.பி.எம். தஸ்லீம், ஹுசைன்தீன் பாத்திமா ரிஹ்லா, ஏ.பீ. கலீல்தீன், ராஜா நித்திலன், மஸாஹிரா கனி, அப்துல்லாஹ் சியாமீர், இ. கலைநிலா, மலாய்கவி டிவாங்ஸோ, கலேவெல ராஜன் நசீர்தீன், ஆர். தங்கமணி, எம்.ஐ.எஸ். ஹமீத், மஸீதா அன்சார், லைலா அக்ஷியா, வாழைத்தோட்டம் எம். வஸீர், கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ், எஸ். தனபாலன், இறைஞானக் கவி ரமீஸ் பீர் முஹம்மத், வெளிமடை ஜஹாங்கீர், கம்மல்துறை இக்பால், ஏ.கே. இளங்கோ ஆகியோர் கவிதை பாடினர்.
ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணன், துபாயிலிருந்து விஜயம் செய்த கலைநிலா சாதிக்கீன், எம்.எஸ்.எம். ஸஃபீர், ஏ.டப்ளியு. அப்துல் அஸீஸ், ஜொயெல் ஜோன்சன், நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், கவிதா இளங்கோ, எம். நுஷா, எஸ்.எச்.என். நஸ்ரியா, எம்.எஸ்.எம். யெஹியா, ஆர்.எஸ். ரஸ்மியா, எப்.எம். ரையான், எம்.எஸ்.எம். ஜின்னா போன்றோர் சபையை அலங்கரித்தனர்.
No comments