Header Ads

Header ADS

தேசிய தொழிற்துறை விசேடத்துவ விருது விழாவில் கௌரவிக்கப்பட்ட SINGHE Furniture

தேசிய தொழிற்துறை விசேடத்துவ விருது விழாவில் கௌரவிக்கப்பட்ட SINGHE Furniture

இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையினால் (IDB) ஏற்பாடு செய்யப்பட்ட 2024 தேசிய தொழிற்துறை விசேடத்துவ விருது விழாவில், SINGHE Furniture நிறுவனத்திற்கு இரு பிரதான விருதுகள் வழங்கப்பட்டன. இலங்கையின் பொருளாதாரத்திற்கும் நாட்டின் தளபாடப் பொருட்கள் உற்பத்தித் துறைக்கும் வழங்கிய முக்கிய பங்களிப்புக்காக இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் பிரதான நிகழ்வு, இலங்கையின் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தலைமையில், கல்கிஸ்ஸை ஈகல்ஸ் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்றது.
மத்திய அளவிலான தொழிற்துறையில் உயர் மட்ட செயற்றிறனை அடைந்தமைக்காக உயரிய “பிளட்டினம் விருது”, மரம் மற்றும் மரம் சார்ந்த, தளபாட உற்பத்திகள் பிரிவில் சிறந்த கைத்தொழில் வர்த்தகநாமம் எனும் “தேசிய விருது” ஆகிய இரு விருதுகள் SINGHE Furniture நிறுவனத்துக்கு கிடைத்துள்ளன. இதன் மூலம், நாட்டின் தளபாட உற்பத்தித் துறையில் தனது முன்னணி நிலையை SINGHE Furniture மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தளபாட உற்பத்தி தொழில்துறையைச் சேர்ந்த தொழில்முயற்சி நிறுவனங்கள் 22 இற்கு இடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட SINGHE Furniture நிறுவனத்தின் வெற்றி, அதன் தரமான உற்பத்திகள், புத்தாக்கம் சார்ந்த வடிவமைப்புகள் மற்றும் நீடித்து நிலைக்கும் நடைமுறைகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பை எடுத்துக் காட்டுகின்றன.
தளபாட உற்பத்திகள் துறையில் இலங்கையின் வேலைப்பாடுகளை தேசிய மட்டத்தில் உயர்த்தியவாறு, தேசிய உற்பத்திகளை உலக சந்தைக்கு பரப்புவதே எமது நோக்கமாகுமென, SINGHE Group பணிப்பாளர் மாலக ரூபசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த மாலக ரூபசிங்க,
"பாரம்பரியத்தை நவீன வடிவமைப்புடன் இணைத்து, எமது தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் உயர்தர உற்பத்திகளை சந்தைக்கு வழங்கி வருகிறோம். நவீன தொழில்நுட்பத்தையும் சிறந்த பாரம்பரியத்தைதயும் பின்பற்றி, வாடிக்கையாளர்களுக்கு உயர் தரமான தளபாடங்கள் மற்றும் நட்பான சேவையை வழங்குவதே எமது நோக்கமாகும். இந்த வெற்றி எமது குழுவின் அர்ப்பணிப்பு, உழைப்பு மற்றும் தொலைநோக்கு கொண்ட இலக்கை நோக்கி பாடுபட்டு உழைத்ததன் பிரதிபலனாகும் என்பதுடன், இது எமது நிறுவனத்தின் தூரநோக்கை வலுவூட்டுவதற்கான மிக முக்கியமான ஒரு வாய்ப்புமாகும்.” என்றார்.
1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட SINGHE Furniture நிறுவனம், மக்களின் அன்றாட தேவைகளுக்கும் வசதிகளுக்கும் ஏற்ற தளபாடங்களை தயாரிக்கும் நம்பகமான வர்த்தகநாமமாக உருவெடுத்துள்ளது. மொறட்டுவை மற்றும் மாலபே பிரதேசங்களில் உள்ள அதன் காட்சியறைகளில் வீட்டு மண்டபங்கள், உணவறைகள், படுக்கையறைகள் உள்ளிட்ட பல்வேறு அறைகளுக்கான பரந்துபட்ட தளபாடங்களை வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய முடியும். தேக்கு உள்ளிட்ட உயர்தர மரங்கள் மற்றும் சிறந்த கலைஞர்களின் கைவினைப் பங்களிப்பால் உருவாகும் அழகிய தளபாடங்கள் இங்கு கிடைக்கின்றன.
இந்நிறுவனம் தளபாட உற்பத்தி கைத்தொழில்துறையில் கொண்டுள்ள அனுபவம் மற்றும் வெற்றிக்கு அப்பால், WAVE Bolgoda by SINGHE எனும் பெயரில் சுற்றுலா அபிவிருத்தித் துறையிலும் பிரத்தியேகமான சாதனையையும் பதிவு செய்துள்ளது. உணவகங்கள், விழா மண்டபங்கள், கரோக்கி கூடங்கள், ஓய்வு அறைகள், நீர் விளையாட்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த இடங்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றன.
SINGHE Furniture நிறுவனம் தமது தரநிலைகள் மற்றும் மதிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு நேரில் அனுபவிக்க வழிவகுக்கும் வகையில், ‘Furniture Doctor’ எனும் சேவையையும் முன்னெடுத்து வருகிறது. இவை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு www.singhefurniture.lk எனும் இணையத்தளம் மூலமாகவோ, 0767288143 எனும் இலக்கம் ஊடாகவோ தொடர்பு கொள்ளலாம்.








No comments

Powered by Blogger.