அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளையின் *இளைஞர் விவகார பிரிவினால் தொடராக நடைபெற்று வரும் இளைஞர்களுக்கான தலைமைத்துவ *ஒரு மாத கால சான்றிதழ் பயிற்சி நெறியின்* முதற்கட்ட அறிமுக நிகழ்வு 29.01.2025 புதன்கிழமை காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வை அஷ் ஷெய்க் *MSM. முபாறக் (றியாழி) MA* அவர்கள் நெறியாள்கை செய்ததுடன் தலைமை உரையை ஜம்இய்யாவின் கௌரவ தலைவர் *அஷ்ஷெய்க் MI. அப்துல் கபூர் (மதனி) BA* அவர்களும், வரவேற்பு உரையை கௌரவ செயலாளர் *அஷ்ஷெய்க் MIM. ஜவாஹிர் (பலாஹி) BA* அவர்களும் மற்றும் இக்கற்கை நெறி சம்பந்தமான அறிமுக கருத்தரங்கு நிகழ்வை இளைஞர் விவகாரப் பிரிவின் உறுப்பினர் *அஷ்ஷெய்க் இஹ்ஸான் ஏ றஹீம் (அல் ஹாஷிமி) BSc.in.psy* அவர்களும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இளைஞர் விவகாரப் பிரிவின் கௌரவ செயலாளர் *அஷ்ஷெய்க் பாயிஸ் (ஹுமைதி)* அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டதுடன் தொடர்ந்தும் இளைஞர்கள் இவ் ஒரு மாத தலைமைத்துவ பயிற்சி நெறிக்கு உள்வாங்கப்படவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா,
காத்தான்குடி கிளை
No comments