காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்ற வித்தியாரம்ப விழா.

2025ம் வருடத்துக்கான தரம் 01 புதிய மாணவர்களை வரவேற்கும்
"பாடசாலை கல்விக்கு மகிழ்ச்சிகரமான ஆரம்பம்" எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலையின் அதிபர் ஏ.ஆர்.எம். அஸ்ஹர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வழிகாட்டல் ஆலோசனை பிரிவுக்கான ஆசிரியர் ஆலோசகர் எம். ஆர். எம். ஏ. ஜவாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு பாடசாலை மாணவர்கள் பூமாலை அணிவித்ததுடன் அதனைத் தொடர்ந்து 2025ம் வருடத்துக்கான தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கு தரம் இரண்டு மாணவர்கள் பூமாலை அணிவித்து பேண்ட் வாத்தியங்களுடன் வரவேற்பளித்தனர்.
அதனையடுத்து தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான இஸ்லாமிய விழுமியங்களுடனான வித்தியாரம்ப நிகழ்வும் நிறமூட்டப்பட்ட அரிசியில் தமிழ் அரிச்சுவடிகள் எழுதி பழக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 2025ம் வருடத்துக்கான தரம் ஒன்றில் கல்வி கற்பதற்காக சுமார் 69 புதிய மாணவர்கள் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மதத் தலைவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
No comments