Header Ads

Header ADS

பாதுகாப்பு அமைச்சின் அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் நடைமுறை இடைநிறுத்தம்

எதிர்வரும்(2021) ஆண்டுக்கான துப்பாக்கி மற்றும் தனியார் பாதுகாப்பு முகவரகங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்தல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போதைய கொவிட்- 19 தொற்றுப் பரவலால், அமைச்சின் சேவைகளைப் பெற வருவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவிக்கிறது.

துப்பாக்கி மற்றும் தனியார் பாதுகாப்பு முகவரகங்களுக்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல் பாதுகாப்பு அமைச்சால் மட்டுமே மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.