தனிமைப்படுத்தல் ஊரடங்கால் உயர்தர பரீட்சார்த்திகள் பாதிக்கப்பட மாட்டார்கள்
பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டமுள்ள பகுதிகளில் க.பொ.த.உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன்படி இவ்வாறான பகுதிகளில் பஸ் மற்றும் புகையிரதங்களிலிருந்து இறங்குவதற்கு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் உயர்தர பரீட்சார்த்திகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஆரம்பமான இவ்வாண்டு உயர்தர பரீட்சைகள் 2648 நிலையங்களில் நடைபெற்று வருகின்றன. இதன்படி அநேக மாகாணங்களில் பாதுகாப்பான முறையில் பரீட்சைகள் நடைபெற்றுள்ளன.
No comments