Header Ads

Header ADS

பள்ளிவாயல்கள் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டுகோள்

இலங்கை வக்பு சபை வெள்ளிக்கிழமை தொழுகை செய்வோர் மற்றும் ஏனைய தொழுகைகளில் ஒரே நேரத்தில் பங்கேற்போரின் எண்ணிக்கையை 50 ஆக வரையறை செய்துள்ளது.

இதன்படி பள்ளிவாயல்களுக்கு வருகை தருவோர் தங்களை அடையாளப்படுத்தும் விபரங்களை வாயிலில் வழங்க வேண்டும் என்பதுடன் அனைத்து வேளைகளிலும் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளிகளைப் பேணுவதும் கட்டாயமாகும். அத்துடன் தங்கள் சொந்த தொழுகை விரிப்புகளையே கொண்டுவரவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் உள்ள இடங்களில் பள்ளிவாயல்கள் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.