Header Ads

Header ADS

வடக்கு, கிழக்கில் ஆசிரியர் வெற்றிடம் நிரப்பப்படும்: கல்வி அமைச்சர்

நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதாக இன்று பாராளுமன்றில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவது குறித்த பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

மேலும் கல்வி அமைச்சு முழு நாட்டுக்கும் சேவை செய்ய உறுதிபூண்டுள்ளதுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு தனிப்பட்ட விஜயம் செய்து இந்த விடயம் குறித்து ஆராய நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.