புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளிலிருந்து சுகாதார பரிசோதகர்கள் விலகல்
ஐந்தாம் தர புலமைப்பபரிசில் பரீட்சை தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மாவட்ட மாகாண சுகாதார அதிகாரிகளிடமிருந்து உரிய அறிவுறுத்தல்கள் கிடைக்காததன் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது..
கொரோனா வைரஸ் நோயாளிகள் இன்னமும் அடையாளம் காணப்படுவதால் நாட்டில் ஆபத்து இன்னமும் நீடிக்கின்றது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுசுகாதார பரிசோதகர்கள் பரீட்சை நடைபெறும் நிலையங்களை கண்காணிக்கவேண்டும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ள போதிலும்,மாகாண மாவட்ட அதிகாரிகள் தங்களை அழைக்கவில்லை என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
No comments