Header Ads

Header ADS

கொழும்பிலிருந்து யாழ் சென்ற சி.ஐ.டி. யினர் விக்கினேஸ்வரனிடம் மீண்டும் விசாரணை

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த விஷேட சி.ஐ.டி.குழு ஒன்று வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரனிடம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் உள்ள அவரது வாசஸ்தலத்தில் வைத்தே இந்த விசாரணை இடம்பெறுவதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. மாலை 4.00 மணியளவில் ஆரம்பமான விசாரணைகள் தற்போது வரையில் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலுக்கு முன்னரும் சி.ஐ.டி.யினர் இதேபோன்ற விசாரணை ஒன்றை விக்கினேஸ்வரனிடம் நடத்தியிருந்தார்கள்.

தமிழ் மக்கள்தான் இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் என்ற கருத்தில் அவர் நிகழ்த்திய உரை ஒன்று தொடர்பாகவே இந்த விசாரணை இடம்பெறுவதாகத் தெரிகின்றது.

No comments

Powered by Blogger.