20வது திருத்தத்திற்கு நாட்டில் கடும் எதிர்ப்பு நிலவுகின்றது- ராஜித
20வது திருத்தம் தொடர்பி;ல் சமூகத்தில் கடும் எதிர்ப்புகள் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்குள் ஒரு குழுவினர் 20வது திருத்தத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக வாக்கெடுப்பில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
20வது திருத்தத்தின் நகல்வடிவில் மாற்றங்களை செய்யவேண்டும் என்ற அமைச்சர்களின் வேண்டுகோளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மகாசபையை சேர்ந்தவர்கள் உட்பட பலர் 20வது திருத்தத்தினை எதிர்க்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
19வது திருத்தத்தை எதிர்த்த பலர் தற்போது அதற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கின்றனர் எனவும் ராஜித தெரிவித்துள்ளார்.
No comments