Header Ads

Header ADS

இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருப்பவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு விமல் வாசு எதிர்ப்பு- கெஹெலிய

அமைச்சர்கள் விமல்வீரவன்சவும் வாசுதேவ நாணயக்காரவும் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருப்பவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு அனுமதிக்ககூடாது என்ற கருத்தை கொண்டுள்ளனர் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இரு அமைச்சர்களும் தங்கள் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிவித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருப்பவர்களை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு அனுமதிப்பது குறித்த முடிவை மக்களே எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த சர்வஜனவாக்கெடுப்பே சரியான தீர்வாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.