கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைகள் பீட (Department of Political Science & Public Policy - University of Colombo) இறுதியாண்டு மாணவர்களினது ஆய்வு நோக்கிலான கள விஜயமும் கலந்துரையாடலும்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் கள விஜயமொன்றினை முன்னெடுத்திருந்த கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைகள் பீட இறுதியாண்டு மாணவர்களுடனான கலந்துரையாடல் அமர்வொன்று நேற்றைய தினம் (28) காலை 09:00 மணி தொடக்கம் காலை 11:00 மணி வரை மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
சம்மேளன பதில் தலைவர் அல்ஹாஜ். MCMA. சத்தார் BSc (BA.d) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலினை பொதுச் செயலாளர் மௌலவி. SHM. றமீஸ் ஹாபிழ் ஜமாலி MA (Linguistics) அவர்கள் நெறிப்படுத்தினார்கள்.
வரவேற்புரை, சம்மேளனம் தொடர்பான அறிமுகம், அதனது நிர்வாக கட்டமைப்பு மற்றும் சம்மேளன யாப்பு தொடர்பாக பொதுச் செயலாளர் மௌலவி. SHM. றமீஸ் ஹாபிழ் ஜமாலி MA ( Linguistics) அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.
சம்மேளனத்தின் பணிகள் அதனூடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள், உப குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பாக சம்மேளன பதில் தலைவர் அல்ஹாஜ். MCMA. சத்தார் BSc (BA.d) அவர்கள் மிக விரிவாக விளக்கினார்கள்.
எமது பிரதேசத்தினை மையப்படுத்தி பல் சமய ரீதியான பல்கலாசார வகைமை (Intercultural) தொடர்பாக சம்மேளன நிர்வாக சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அல்ஹாஜ். A உவைஸ் LL.B அவர்கள் விளக்கமளித்தார்கள்.
இக் கலந்துரையாடல் மற்றும் எமது பிரதேசம் தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைகள் துறை தலைவர் Dr. Mahesh Senanayake அவர்கள் கருத்துரை வழங்கினார்கள்.
நிகழ்வின் இறுதி அம்சமாக மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கான நேரம் வழங்கப்பட்டதுடன், சம்மேளனத்தின் காத்திரமான செயற்பாடுகள், சமூக கலாச்சார பல்வகைமை (Socio Cultural) மற்றும் அரச பொறிமுறைகளுடனான ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்பாடல் ஆகிய விடயங்களுக்கான தெளிவுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் விரிவுரையாளர்கள், அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைகள் பீட இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் சம்மேளன நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
ஊடகப் பிரிவு,
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,
காத்தான்குடி
2025.09.29
No comments