கலாநிதி பட்டம் பெற்ற இளம் உலமாவுக்கு ஜம்இய்யத்துல் உலமா கெளரவம்.
(எம்.பஹத் ஜுனைட்)
அண்மையில் கலாநிதி பட்டம் பெற்ற கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எப்.எம். ஷிபான் (பலாஹி, அஸ்ஹரி) PhD அவர்களை காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (28) ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளை காரியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா சபை பதில் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.அப்துல் கபூர் (மதனி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ஜவாஹிர்(பலாஹி), அஷ்ஷெய்க் ரீ.எம்.எம்.அன்சார்(நளீமி), அஷ்ஷெய்க் எம்.ஐ.அப்துல் கையூம்(ஷர்கி), அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் (மதனி) உள்ளிட்ட உலமாக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இளம் வயதில் எகிப்த் சர்வதேச அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டமைக்காக அஷ்ஷெய்க் எம்.எப்.எம். ஷிபான் (பலாஹி, அஸ்ஹரி) PhD அவர்கள் ஊர் சார்பில் உலமாக்களால் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments