Header Ads

Header ADS

மாவடிப்பள்ளி பெரிய பள்ளிக்கு முன்னாள் எம்.பி ஹரீஸ் நிதி ஒதுக்கீடு :


மாவடிப்பள்ளி பெரிய பள்ளிக்கு முன்னாள் எம்.பி ஹரீஸ் நிதி ஒதுக்கீடு : நிர்மாணப்பணிகள் தொடர்பில் ஆராய களவிஜயம் செய்தார் ! 


மாவடிப்பள்ளி கிராமத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் எப்போதும் கரிசனையுடன் செயற்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 06 மில்லியன் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் மாவடிப்பள்ளி ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் சுற்றுமதில்கள் மற்றும் பள்ளிவாசல் அபிவிருத்திப்பணிகளை இன்று கள விஜயம் செய்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் ஆராய்ந்தார். 


மாவடிப்பள்ளி ஜும்ஆ பெரியபள்ளி வாசலின் தலைவர் வை.வி. அப்துல் மனாப் தலைமையிலான நம்பிக்கையாளர்களை சந்தித்து ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் அபிவிருத்திப்பணிகள், ஊர்நலன் சார் விடயங்களை கலந்துரையாடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் தனது நிதியொதுக்கீட்டில் நடைபெறும் வேலைத்திட்டங்களை பார்வையிட்டதுடன் அடுத்தகட்ட பணிகளுக்கு தேவையான ஒழுங்குகள் தொடர்பிலும் கலந்துரையாடினார். 


முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா உட்பட முன்னாள் எம்.பி ஹரீஸ் அவர்களின் இணைப்பாளர்கள், நம்பிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்ட இந்த விஜயத்தின் போது தொடர்ச்சியாக மாவடிப்பள்ளி கிராமத்தின் வளர்ச்சியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களினதும், அவரது குடும்பத்தினரினதும் தொடர்ச்சியான பங்களிப்பு தொடர்பில் சிலாகித்து பேசிய ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் அவரின் தொடர்ச்சியான மக்கள் பணிக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர். 


ஊடகப்பிரிவு

No comments

Powered by Blogger.