Header Ads

Header ADS

அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது-கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனிய பாரதி

பாறுக் ஷிஹான்

அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பொலிஸாருக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைக்க தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனிய பாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் தெரிவித்தார்.
அம்பாறை ஊடக அமையத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு தீ வைக்க வேண்டிய தேவை எனக்கில்லை. நீதிமன்ற களஞ்சியத்திற்கு தீ வைக்கின்ற அளவிற்கு சின்ன ஆளும் நான் அல்லர்.நாட்டின் சட்டம் என்ன சொல்கின்றதோ நீதிமன்றத்திற்கு எதிரான செயற்பாட்டில் ஈடுபட்டால் சட்டம் என்ன கூறுகின்றது என்பதை நான் தெளிவாக அறிவேன்.2004 ஆண்டு நாங்கள் கண்ட கண்டவர்களின் கதைகளை கேட்டு செயற்பட்டகாலங்கள் போல் தற்போது செயற்பட நாம் தயார் இல்லை.எனெனில் நாங்கள் முதிர்ச்சியடைந்துள்ளோம்.
அதில் அரசியல் மற்றும் சட்ட நீதியாகவும் எமக்கு அனுபவம் உள்ளது.எனவே இவ்வாறான சம்பவத்துடன் பொய்யான பிரச்சாரங்களை என்னை தொடர்பு படுத்த வேண்டாம்.உண்மை நிலையை அறிய வேண்டியவர்கள் எம்மை தொடர்பு கொண்டு மக்களுக்கு தெளிவு படுத்த முன்வர வேண்டும்.அத்துடன் நான் இச்சம்பவம் இடம்பெற்ற பின்னர் தலைமறைவாகியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.அது உண்மைக்கு புறம்பானது என்பதுடன் இச்சம்பவத்திற்கு பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.