Header Ads

Header ADS

சாய்ந்தமருது ஏ.ஆர்.எம்.(ARM)பாலர் பாடசாலையின் 22 வது வருடாந்த பட்டமளிப்பு விழாவும்,கலை நிகழ்ச்சியும்...! -------------

( எம்.என்.எம்.அப்ராஸ்)

சாய்ந்தமருது ஏ.ஆர்.எம்(ARM)பாலர் பாடசாலையின் 22 வது வருடாந்த பட்டமளிப்பு விழாவும் கலை நிகழ்ச்சியும் அப்பாடசாலையின் அதிபர் எம்.எச்.றிபாயா ஜாபீர் தலைமையில்(15)சாய்ந்தமருது வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
குழந்தைச் செல்வங்களின் ஆடல் பாடல் உள்ளிட்ட கலைநிகழ்வுகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் பிரபல சமூக சிந்தனையாளருமான பொறியலாளர் கலாநிதி உதுமாங்கண்டு நாபீர் அவர்கள் கலந்து கொண்டார்.
நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஷால் அபூபக்கர், விஷேட அதிதிகளாக கல்முனை வலைய பாலர் கல்வி பணியகத்தின் கள உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.அனீஸ், சாய்ந்தமருது மல்ஹர் ஸம்ஸ் மஹா வித்தியாலயத்தின் அதிபர் றிப்கா அன்ஸார் அவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின்போது பிரதம அதிதி பொறியலாளர் கலாநிதி உதுமாங்கண்டு நாபீர் அவர்கள் சமூகத்துக்கு ஆற்றிவரும் நல்ல பணிகளுக்காக பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
பொறியலாளர் கலாநிதி உதுமாங்கண்டு நாபீர் அவர்களால் சாய்ந்தமருது ஏ.ஆர்.எம்(ARM)பாலர் பாடசாலையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஒரு தொகை பணத்துக்கான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகர் நாபீர், மேடைக்கூச்சம் களைந்து தங்களது திறமைகளை மேடையேற்றிய குழந்தைச் செல்வங்களைப் பாராட்டியதுடன் குறித்த மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
பொருளாதார ரீதியில் கஷ்ட்டத்தில் சிக்கியுள்ள நாட்டை மீட்பதற்கு சிறந்த கல்வியே பிரதானவழி என்று தெரிவித்த நாபீர்,அதற்காக ஆசிரியர்களும் பெற்றோரும் பிரதான பங்காற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மக்களின் அடிப்படைத்தேவைகளை பூர்த்திசெய்ய தன்னாலான பல்வேறுபட்ட பணிகளை செய்துவருவதாக தெரிவித்த அவர், மக்கள் மத்தியில் சிறந்த தலைவர்களின் தேவை உணரப்பட்டு
வருவதாகவும் எதிர்காலத்தில் தங்களுக்கு அருகில் இருந்து உதவக்கூடிய தலைவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சாய்ந்தமருது ஏ.ஆர்.எம்(ARM) பாலர் பாடசாலையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஒரு தொகையை வழங்கியுள்ளதாக தெரிவித்த நாபீர், எதிர்காலத்தில் இவ்வாறான உதவிகளை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வின்போது கடந்த வருடம் குறித்த பாலர் பாடசாலையில் கற்று வெளியேறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
MNM.Afras
0772961631
journalist














No comments

Powered by Blogger.