ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கும், Lucky Star அணிக்கும் இடையிலான நட்பு ரீதியான கிரிக்கெட் சுற்று போட்டி
156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையாத்தினால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கும், Lucky Star அணிக்கும் இடையிலான நட்பு ரீதியான கிரிக்கெட் சுற்று போட்டியொன்று ஏறாவூர் நிலைய பொறுப்பதிகாரிஹர்ஷடி சில்வா தலைமையில் ஏறாவூர் அஹமட் பரீட் மைதானத்தில் இடம்பெற்றது நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஏறாவூர் பொலிஸ் அணியினர் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்து துடுப்பெடுத்தாடி 52 ஒட்டங்களை பெற்று கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Lucky Star அணியினர் 53 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டிக் கொண்டனர்.வெற்றி பெற்ற Lucky star அணியினருக்கான வெற்றி கேடயத்தை ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹர்ஷடி சில்வாஅவர்கள் வழங்கி வைத்தார்.அத்தோடு ஏறாவூர் பொலிஸாருக்கான கிண்ணத்தை ஏறாவூர் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி காரியப்ப அவர்கள் வழங்கி வைத்ததோடு ஆட்டத்தின் சிறந்த ஆட்ட நாயகனுக்கான கிண்ணத்தை M.B.M பெரோஸ் அவர்கள் வழங்கி வைத்தார்.இந்த விளையாட்டு போட்டியில் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் அதிகமான பொது மக்களும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது




















No comments