தொடர்ந்து அச்சுருத்தப்பட்டு வரும் வாகனேரி கிராமம்
( செய்தியாளர் ஏறாவூர் சாதிக் அகமட் )
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட வடமுனை, ஊத்துச்சேனை, கள்ளிச்சை, மைலந்தனை, வாகனேரி, மஜ்மாநகர், சுடுபத்தினசேனை, அரபாநகர், நாவலடி போன்ற கிராமங்கள் தொடர்ந்து யானைகளது அட்டகாசத்தால் தாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வாகனேரி, குளத்துமடு கிராமம் ஒவ்வொரு நாளும் யானைகளது அச்சுருத்தலுக்கு உட்பட்ட கிராமமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் குளத்துமடு கிராமத்தில் நள்ளிரவில் யானை வீடு ஒன்றை முழுமையாக தாக்கி உடைத்து சேதமாக்கியதுடன் வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த விதை நெற்களையும் சேதப்படுத்தியுள்ளது. அவ்வீட்டில் தூங்கிய குடும்பத்தினர் மயிர் இழையில் உயிர்தப்பினர்.
இவ்விடயம் தொடர்பாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் வாகனேரி வட்டார கௌரவ உறுப்பினர் திரு. யோகஸ்வரன் கௌரவ தவிசாளர் ஏ.எம்.நௌபர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தவிசாளர் தலமையிலான குழுவினர் குறித்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆருதல் கூறியதுடன் மக்களிடம் சேதத்திற்கான இழப்பீட்டை பெறுவதற்கான மதிப்பீட்டினையும், வழிகாட்டல்களையும் மேற்கொண்டதுடன் வனஜீவராசி திணைக்களத்தோடு தொடர்புகொண்டு குறித்த கிராமங்களுக்கு யானை வேலி போடுவதை துரிதப்படுத்துமாறும் உடனடியாக யானை வெடிகளை இக்கிராமத்து மக்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறும் அறிவித்துள்ளார்.
No comments