முன்மாதிரிமிக்க தொழிலதிபர்
ஏறாவூர். மட்/றஹ்மானிய்யா வித்தியாலயத்தின் மாணவர்கள் ஆசிரியர்களின் நன்மை கருதி ஸம் ஸம் ரியல் எஸ்டேட் பிரைவட் லிமிடட், ஸம் ஸம் றைஸ் மில் ஆகியவற்றின் பணிப்பாளரும், ஏ.ஜீ. அப்துர் ரஹ்மான் அறக்கட்டளை நிதியத்தின் தலைவருமான டாக்டர் ஏ.ஜீ அப்துர் ரஹ்மான் (றியாழ் ஹாஜி) அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரூபா 435,000/- பெறுமதியான தளபாடங்கள் பாடசாலை அதிபர் டீ.எம். உவைஸ் அவர்களிடம் இன்று (17/08/2022) அன்று கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் அப்துர் ரஹ்மான் பவூன்டேஷன் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தொழிலதிபர் றியாழ் ஹாஜி அவர்கள் தொடர்ச்சியாக மாதா மாதம் பொது நிறுவனங்களுக்கு ரூபா 400,000/-- வழங்கி வருகின்ற முன்மாதிரி மிக்க ஒரு சமூகசேவையாளர் ஆவார். இவர் கடந்த காலங்களில் இவரின் சொந்த பணத்தினால் மீள் குடியேற்ற வீட்டுத்திட்டங்கள், ஏழைகளுக்கான காணித்துண்டுகள், பாடசாலைகள், பொது நிறுவனங்கள், விளையாட்டு கழகங்களுக்கு பல உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments