கொரோனா தொற்றாளர்கள் பயன்படுத்திய கழிவுப்பொருட்களை அகற்ற நடவடிக்கை
கொரோனா தொற்றாளர்கள் பயன்படுத்தி கழிவுப் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் -19 கொரோனா தொற்றாளர்கள் என அடை யாளம் காணப்பட்ட நபர்கள் மற்றும் சுய தனிமைப் படுத்தப்பட்ட நபர்கள் பயன்படுத்திய முகக்கவசம் உட்பட ஏனைய கழிவுப்பொருட்களை வெளி யேற்று வதற்கான சுகாதார வழிகாட்டி ஒன்றை மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் பொதுவாக அனைத்து பகுதிகளுக்கும் அவ்வாறான கழிவுப்பொருட்களைப் பொறுப்பேற்பதற்கு உள்ளூராட்சி மன்றங்களின் வாகனங்களைத் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் மற்றும் பணியாட்களை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி மன்றங்களின் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப் பட்டுள்ளது.
கொவிட் -19 கொரோனா தொற்றாளர்கள் பயன்படுத்திய முகக்கவசம் மற்றும் கையுறைகளை மஞ்சள் பையில் இட்டு பிரித்து வைத்திருக்க வேண்டும்.
குறித்த பைகளில் உள்ள கழிவுகளை ஒருபோதும் மீள் சுழ ற்சி செய்யக்கூடாது, அவற்றை முறையாக அப்புறப் படுத்த வேண்டும்.
கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் பயன்படுத்தும் முகக்கவசங்கள் மற்றும் கையுறை சுற் றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந் துள்ளதால் இவற்றைத் தவிர்க்கும் முகமாகச் சுகாதார வழிகாட்டி ஒன்றை மத்திய சுற்றாடல் அதிகார சபை யினால் வெளியிடப்பட்டுள்ளது.
No comments