கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று கொரோனா தொற்றிலிருந்து 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள தகவலுக்கு அமைய ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் 5 நோயாளர்களும் , தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவகத்திலிருந்து ஒரு நோயாளி மற்றும் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் இருந்து ஒரு நோயாளரும் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,266. ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .




No comments