Header Ads

Header ADS

பெரியநீலாவணை மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாசலில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து விசேட துஆ பிராத்தனை



(ஏ.எல்.எம்.ஷினாஸ்)






பெரியநீலாவனை மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாசல் நிருவாக சபை ஏற்பாடு செய்த கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தீவிரவாத தக்குதல் காரணமாக உயிர்நீத்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட துஆ பிராத்தனை நிகழ்வு இன்று (21.04.2020) பள்ளிவாசலில் நடைபெற்றது.





முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் வழிகாட்டலுக்கமைய விசேட துஆ பிராத்தனையை பள்ளிவாசல் இமாம் அஸ்செய்க் எம்.எம்.இல்லியாஸ் மௌலவி நிகழ்த்தினார்.





பள்ளிவாசல் நிருவாக சபை தலைவர் ஏ.நெய்னா முகம்மட் உட்பட நிருவாக சபையின் முக்கிய உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.





















No comments

Powered by Blogger.