சுத்தமானதும், பசுமையானதுமான காத்தான்குடி நகரை நோக்கிய தேசிய வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு..
(எம்.பஹத் ஜுனைட்)
2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின்கீழ் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்திற்கு கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களால் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரத்தை கையளிக்கும் நிகழ்வு செவ்வாயக்கிழமை(22) காத்தான்குடி ஸஹா மெரைன் தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொது நிருவாக மாகாண சபைகள் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன செனரத், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் பொது நிர்வாகம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி மகேஷி கொடிப்பிளி ஆராய்ச்சி, மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி எம்.ஆர்.எப்.றிப்கா ஷபீன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மஹ்ஜூத், கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் தகவல் தொழில்நுட்ப இயக்குநர் மற்றும் ஊடகப் பிரிவு தலைவர் இஸுரு அனுராத விஜேசிங்க ,காத்தான்குடி கிளின் ஸ்ரீலங்கா திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.பி.எம்.பிர்தெளஸ்(நளீமி), கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்பு செயலாளர் யூ.எச்.எம்.அப்துல்லாஹ் மற்றும் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள், நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி நகரசபையின் கீழ் இயங்கிவரும் கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு இலங்கையில் முதன் முதலாக திண்மக்கழிவுகளைத் தரம்பிரித்து மீள் சுழற்சி செய்யும் இயந்திரத்தினைக் கொள்வனவு செய்வதற்காக ரூபா 50862246.97 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் திண்மக்கழிவுகளைத் தரம்பிரித்து மீள் சுழற்சிசெய்யும் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments