காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் மற்றுமொரு மாபெரும் சாதனை
எமது பாடசாலையை சேர்ந்த மாணவன் AA.Abdullah Aaris , Robotics and Innovation போட்டியில் தேசிய மட்ட போட்டியில் கலந்து கொண்டு அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றதுடன் Gold Medal மற்றும் 25,000 பணப்பரிசில் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் Robotic - productive & industry - Portable finger print Machine இனை தனது புத்தாக்கமாக சமர்ப்பித்து தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார். இந் நிகழ்வானது இன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள அபே கமயில் இடம்பெற்றதுடன் பிரதமர் ஹரினி அமரசூர்ய அவர்களும் கலந்து கொண்டார். மேலும் இம்மாணவர் கடந்த மாதம் இடம்பெற்ற மாகாண மட்ட போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவானது குறிப்பிடத்தக்கது.
மேலும் எமது பாடசாலையை சேரந்த மற்றுமொரு மாணவன்
MJ.Shameeh தனது புத்தாக்கத்தினை மற்றுமொரு பிரிவில் சமர்ப்பித்து மாகாண ரீதியில் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிகளில் கலந்து கொண்டு Merit மற்றும் 5000 ரூபா பரிசினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த மாணவர்களுக்கு பாடசாலை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Hilurians Media Unit
No comments