2025 ஆண்டிற்கான cat 2 கணித வினாடி வினா போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றி
காத்தான்குடி 3ம் குறிச்சியைச்சேர்ந்த முஹம்மது ஜனூஸ் ஆரிஸ் என்பவர் 2025 ஆண்டிற்கான cat 2 கணித வினாடி வினா போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்று வெளிநாடு ஒன்றில் இடம்பெற விருக்கும் போட்டிக்கு செல்வதற்கான பரீட்சைக்கு தயாராகிகொண்டிருக்கின்றார். அல்ஹம்துலில்லாஹ் இவர் காத்தான்குடி பாத்திமா பாலிகா வி.தில் ஆரம்ப கல்வி கற்று 5ம் தர புலமைப்பரிசில் பரீட் சையில் காத்தான்குடி கோட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று தற்போது மட் /மட் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் தரம் 8 இல் கல்வி கற்றுக்கொண்டிருகின்றார். இவர் கடந்த 2024 ம் ஆண்டு இதே கணித வினாடி வினா போட்டியில் cat 2 இல் கலந்து கொண்டு சர்வதேச போட்டிக்கு தேர்வாகி இந்தியா லக்னோ வில் நடந்த மூன்று போட்டிகளில் கலந்து கொண்டு மூன்றிலும் மெரிட் பாஸ் பெற்று நாடு திரும்பிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ் இவருக்கு உறுதுணையாக இருந்த அதிபர் ஆசிரியர்கள் மற்றும் கல்விச்சமூ கத்தினருக்கும் பெற்றோர் சார்பாக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின் ரோம்.
No comments