Header Ads

Header ADS

நீண்ட காலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தவர் மாவை சேனாதிராசா - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி..!!


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும்,
தமிழ் மக்களுக்காக தன் வாழ்நாட்களை போராட்டங்களோடு ,சிறைவாசங்களோடும் கடந்து பெரும் பங்காற்றிய சரித்திர நாயகன் மாவை சேனாதிராசா அவர்களின் மறைவு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் தலைவர் மாவை சேனாதிராசாவின் மறைவையிட்டு வெளியிட்ட அனுதாப செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மறைந்த தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள் என்னோடு பாராளுமன்றத்தின் இருந்த ஒருவர். அவரை பற்றி நான் நன்றாக அறிந்தவன் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற பல்வேறு சந்தர்ப்பங்களின் தைரியமாக குரல்கொடுத்தவர் என்பதுடன் மிகவும் நீதியாகவும் நியாயமாகவும் நடந்துகொள்கின்றவர் என்பதுடன், தான் எப்போதும் மதிக்கும் தலைவர்களில் ஒருவர் என்றும் என்றும் தெரிவித்தார்.
நீண்ட காலமாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசா ஐயாவின் மறைவு தமிழர் வரலாற்றில் நிரப்ப முடியாத வெற்றிடமாக இருக்கும் என்றும்
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் எனவும் தெரிவித்தார்.
May be a black-and-white image of 1 person and text
See insights and ads
All reactions:
1


No comments

Powered by Blogger.