Header Ads

Header ADS

கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் பெண்கள் பாடசாலையான மட்/மம/ அல் முனிரா பாலிகா மகா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா


(செய்தியாளர் ஏறாவூர் சாதிக் அகமட்)

தற்போது 106 வது வருடத்தை நிறைவு செய்து கொண்டிருக்கும் இப்பாடசாலையில் இன்று முப்பெரும் விழா நிகழ்வு நடைபெற்றது பாடசாலை அதிபர் Mr.NM.மஹாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையில் நவீன விசோட துறைகளுக்கான கல்வி அலகுகளான ஸ்மார்ட் வகுப்பு வரை தகவல் தொழில்நுட்ப பிரிவு விவசாய பிரிவு என்பன திறந்து வைக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களின் சித்திர கண்காட்சியும் அவர்களது நூல் வெளியீடும் நடைபெற்றது.


மூன்றாவது நிகழ்வாக மாணவ தலைவிகளுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் சான்றிதழ் வழங்குதலும் இடம்பெற்று மட்டக்களப்பு மத்திய வலய கல்வி பணிப்பாளர் டாக்டர் எஸ் எம் எம் எஸ் உமர் மௌலானா அவர்கள் பிரதம அதிதியாகவும் பிரதி கல்வி பணிப்பாளர்களான திருமதி எம் ஜே எப். றிப்கா மற்றும் ஜனாப் எம் எச் எம் ரமீஷ் ஆகியோர்கள் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர் அத்தோடு பட்டிருப்பு வலயக் கல்வி அழகியல் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. கே சுந்தரலிங்கம் அவர்கள் விசேட அதிதியாகவும் இதில் கலந்து கொண்டார் பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.அப்துல் நாசர் உதவி அதிபர் எஸ் எம் அமீர் இணைப்பாடவிதான செயற்பாடு உட்பட பிற பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் கல்வி அலுவலர்களும் மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக அமைந்ததுடன் வலயக் கல்வி பணிப்பாளர் பிரதமர் அதிதியாக உரையாற்றும் போது பாடசாலையினுடைய செயலாற்றுகை அபிவிருத்தி தொடர்பாகவும் அதிபர் ஆசிரியர்களின் தியாக மனப்பான்மையுடன் செயல்பாடுகள் குறித்தும் கௌரவமாக பாராட்டி சென்றார்















No comments

Powered by Blogger.