Header Ads

Header ADS

உழுந்து அறுவடை விழா ஏறாவூர் விவசாய போதனாசிரியர் பிரிவில் ஏறாவூர் விவசாய போதனாசிரியர் மு.ஹ.முர்ஷிதா ஷிரீன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

ஏறாவூர் சாதிக் அகமட் 



இதில் வடக்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் இ.சுகுந்ததாசன், விவசாய போதனாசிரியர் கா.லிங்கேஸ்வரன், விவசாய தொழில்நுட்ப உத்தியோகத்தர் ச.அனோஜன் , மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் அமைச்சருமான  கௌரவ பொறியியளாளர்  செய்னுல் ஆப்தீன் நசீர் அகமட்  அவர்களின் இணைப்பு செயலாளர் செ.ஆ.ஜவாத்  உட்பட ஏறாவூர் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் இன்றைய உணவு நெருக்கடியில் குறுகிய கால பயிரும் பணப் பயிர் என்று அழைக்கப்படும் பயிருமான உழுந்தினை பயிரிடுவதனால் 75 தொடக்கம் 85 நாட்களில் அறுவடையை பெறக்கூடிய உள்ளதோடு இரசாயனமற்ற சேதன பயிர்ச் செய்கையாக இவ் உழுந்தை பயிடுவதனால்  நிலத்திற்கு தேவையான நைதரசன் மற்றும் போசணைச் சத்து கிடைப்பதோடு குறைந்தளவு நீர் தேவையுடைய பயிராக இருப்பதனால் வரட்சி யையும் தங்கி வளரக் கூடியதாக உள்ளதுடன் அதிகளவான போசணையினையும் கொண்டுள்ளது எனவும் விவசாய போதனாசிரியர் முர்ஷிதாவினால் கூறப்பட்டது.


மேலும் உதவி விவசாய பணிப்பாளர் இவ் உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக துரித வீட்டுத் தோட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினூடாக 100% மானிய அடிப்படையில் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் 250g எனுமளவில் பயறு,உழுந்து, நிலக்கடலை என்பன வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அதனைப் பெற்று விவசாய போதனாசிரியரின் வழிகாட்டுதலுடன் நடுகை செய்து சிறந்த பயனை பெறவேண்டும் எனவும் கூறப்பட்டதுடன்  விவசாயிகளினால் மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டினால் விவசாய செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பசி பட்டினியால் வாழ வேண்டிய சூழல் உருவாகி உள்ளதாகவும் அதனை இந்த அரசாங்கம் விரைவாக தீர்த்துத்தர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.

















No comments

Powered by Blogger.