Header Ads

Header ADS

ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் முயற்சியினால் பாரிய அபிவிருத்தி வேலைகளுக்கான நிதி ஒதுக்கீடு



ஏறாவூர் பிரதான வீதியை அகலப்படுத்தி விஸ்தரிப்பதற்காக கௌரவ மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக ஏறாவூர் பிரதான வீதியை அகலப்படுத்தி விஸ்தரிப்பதற்காகவும் வடிகான் அமைப்பதற்காகவும் நிதி ஒதுக்கீட்டுக்கான முன்மொழிவு நிதி அமைச்சினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அவர்கள் நிதி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களுக்கும் வீதி பெருந்தெருக்கள் உட்கட்டமைப்பு அமைச்சர் கௌரவ ஜோன்ஸடன் பெர்னாண்டோ அவர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் கௌரவ லான்சா அவர்களுக்கும் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாறு ஏறாவூர் பொதுச்சந்தைக்கான வேலைகளை பூரணப்படுத்துவதற்காக ரூபா 244 மில்லியன் ரூபா நிதியும் பொருளாதார நகர அபிவிருத்தி அமைச்சரும் பிரதம மந்திரியுமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக கௌரவ பிரதம மந்திரி அவர்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் வீதி அபிவிருத்தி கிராமிய உட்கட்டமைப்பு அமைச்சினால் கிராம சேவையாளர் பிரிவுகளை அடிப்படையாக கொண்டு கொங்கிரீட் வீதிகள் அமைக்கப்படுவதற்காக 37 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ஏறாவூர் நகர், கோறளைப்பற்று மத்தி, கோரலைப்பற்று மேற்கு, காத்தான்குடி பிரதேச செயலகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் முயற்சியினால் உடனடியாக வேலைகளை ஆரம்பிப்பதற்கான நிதி ஒதுக்கீடும் கிடைக்கப் பெற்றுள்ளது.











 

No comments

Powered by Blogger.