முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவது அது முஸ்லிம்களது உரிமை
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவது அது முஸ்லிம்களது உரிமை,ஜனநாயக நாட்டில் ஒருவர் விரும்பியவாறு உடையணிவது அவருக்குள்ள மனித உரிமை உள்ளது.
ஜனநாயக நாட்டில் எமது குடையை எமக்கு விரும்பியவாறு சுழற்றுவதற்கு உரிமை உண்டு. ஆனால் அது அடுத்தவரின் முகத்தில் பட்டு காயங்களை ஏற்படுத்திவிடக்கூடாது. என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொது செயலாளர் எம்.ஆர்.பைசால் கூறியுள்ளார்.
மேலும் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் சில சூழ்நிலைகளில் அதாவது அன்னிய ஆண்கள் உள்ள இடங்களில் அதில் மோசமான எண்ணங்கள், காம நோய்யுள்ள உள்ளங்கள் இப்படிப்படட சில ஆண்கள் இருப்பார்கள். பெண்கள் முகத்தை மறைப்பது அவசியமில்லையென்றாலும் அப்படியான ஆண்கள் உள்ள இடத்தை கடந்து செல்வதற்க்காக முகத்தை மறைப்பது பேணுதல் அடிப்படையில் சிறந்த செயலாகும்.
இந்த செயல் பெண்கள், ஆண்கள் இரு சாராருக்கும் நல்லதாகும். எனவே பெண்கள் முகம் மூடுவது கடைமையில்லை சூழ்நிலைகள் என்று வரும்போது அதாவது பெண்கள் முகத்தை மூடுவது கடமையில்லை என்று ஆண்கள் மத்தியில் முகத்தை திறந்து காட்டிக்கொண்டு செல்லாமல் வெட்க உணர்வை காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் யாருடைய உள்ளங்களும் என்னத்தால் பாவங்கள் செய்துவிட நாம் வழிவகுத்துவிடக் கூடாது. சூழ்நிலைக்கும் தேவைகளுக்கு ஏற்றவாரும் பெண்கள் முகங்களை மறைத்துக் கொள்வது பாதுகாப்பான பேணுதலான சிறந்த காரியமாகும். இடதுசாரி முன்னணியின் பொது செயலாளர் எம்.ஆர்.பைசால் குறிப்பிட்டுள்ளார்
Muslim Left Front
General Secretary
M.R.M FAIZAL
0775455529
No comments