Header Ads

Header ADS

இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்வதற்கு இருக்கவேண்டிய தகைமை

இலங்கை மருத்துவ சபையில், ஒருவர் வைத்தியராகப் பதிவு செய்து கொள்வதற்கான அடிப்படை தகைமைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலுக்குப் பாராளுமன்றம் அங்கீகாரமளித்துள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின் ஒழுங்கு விதிகள், சுகா தார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இலங்கை வைத்திய சபையில் பதிவு செய்வதற்கு, வைத் திய மாணவர் ஒருவர், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், குறைந்தபட்சம் 2C, S (02 credit passes, Biology stream and 01 general pass) பெறுபேற்றைப் பெற்றிருக்க வேண் டும் என்ற நிபந்தனைக்குப் பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

No comments

Powered by Blogger.