Header Ads

Header ADS

பொலிவேரியன் விளையாட்டு மைதான குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை


(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பொலிவேரியன் அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நிலவும்
குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு அப்பிரதேசத்தின் சில முன்னணி விளையாட்டுக்
கழகங்களின் பிரதிநிதிகள், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப்
அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை நேரடியாக சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது
தொடர்பாக 11 விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றும்
முதல்வரிடம் கையளிக்கப்பட்டது. குறித்த மைதானத்தில் நிலவும் குறைபாடுகள் மற்றும்
தேவைகளை துரிதமாக நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது
கலந்துரையாடப்பட்டு, சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. சில நடவடிக்கைகளை உடனடியாக
முன்னெடுப்பதற்கு முதல்வர் இணக்கம்
தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.