வடக்கின் ஹர்த்தாலுக்கு முஸ்லிம் மக்களும் ஆதரவு
அரசினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக 10 தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இன்றைய தினம் அழைப்பு விடுத்த ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாண முஸ்லிம் மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கி உள்ளார்கள்.
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்கள் தமது வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் பூட்டி இன்றைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம் மக்கள் தமது ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.
அத்தோடு யாழில் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டு காணப்படுகின்றன ஒரு சில மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்ததையும், அவர்கள் பாடசாலை இயங்காததன் காரணமாக வீடுகளுக்கு திரும்பிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
அத்தோடு நகரப்பகுதியில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன இதனால் யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் வழமையான செயற்பாடுகள் யாவும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
No comments