Header Ads

Header ADS

மும்தாஸ் விளையாட்டு கழக உலமாக்களால் சாய்ந்தமருது மண்னில் வரலாற்று சாதனை


(ஹஸ்ஸான் பாருக் - சாய்ந்தமருது)

உலமாக்கள் என்பவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்தவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்


சாய்ந்தமருதில் உலமாக்கள் அடைங்கிய மும்தாஸ் விளையாட்டு கழகம் தமது 3வது ஆண்டை நிறைவு செய்யும் வகையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள 10 அணிகள் உள்ளடங்கிய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றை 2020/09/27 ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது போலிவேரியன் மைதானத்தில் நடாத்தி சாதனை படைத்தது.


இத்தொடரில்  அரை இறுதிப்போட்டிக்கு  பாலமுனை மஹாஸினி விளையாட்டு கழகம் மற்றும் அக்கரைப்பற்று அரபியன் விளையாட்டு கழகம் ஆகிய இரு அணிகளும் பங்குபெற்றி அரபியன் விளையாட்டு கழகம் 04 ஓவர்களுக்கு 33 ஓட்டங்களை பெற்றது. அதை எதிர்த்து களம் இறங்கிய மஹாஸினி விளையாட்டு கழகம் 04ஓவர்களுக்கு 23 ஓட்டங்களை பெற்றது.

அந்த வகையில் 10 ஓட்டங்களால் வெற்றி வாகை சூடி 2020 மும்தாஸ் கிண்ணத்தை அக்கரைப்பற்று அரபியன் விளையாட்டு கழகம் தமதாக்கி கொண்டது.


No comments

Powered by Blogger.