Header Ads

Header ADS

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்ட செயற்பாட்டினை நேரடியாக சென்று பார்வையிட்ட விசேட குழு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் இலங்கை மின்சார சபையினால் மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் மேற்கொள்ளப் பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி திட்ட செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு மின் வலு அமைச்சர் டலஸ் அழகபெரும மற்றும் காற்று சூரிய சக்தி வலு இராஜாங்க அமைச்சர் துமிந்த திசநாயக்க தலைமையிலான விசேட குழுவினர் நேற்று மாலை குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

சுமார் 30 காற்றாலைகளை கொண்டு அமைக்கப்பட்ட 103.5 மெகா வாற் மின் உற்பத்தி திறனை கொண்ட குறித்த திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பாக குறித்த அமைச்சர்கள் குழு ஆராய்ந்ததுடன் நேரடியாக காற்றாலை மின் உற்பத்தி இடம் பெறும் பகுதி மற்றும் காற்றாலை மின் பிறப்பாக்கி செயற்பாடுகள் இடம் பெறும் பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டனர்.

இந்த விஜயத்தில் அமைச்சர்கள் உட்பட இலங்கை மின்சார சபையின் மேலதிக முகாமையாளர் திட்டப் பணிப்பாளர் திட்ட முகாமையாளர் மற்றும் பொறியியளாலர்களும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.